;
Athirady Tamil News

பிரிவு உபசார விழா: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இரவு விருந்து அளித்தார் பிரதமர் மோடி..!!

0

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அவருக்கு பிரிவு உபசார விழா நேற்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ராம்நாத் கோவிந்துக்கு இரவு விருந்து அளித்தார். இந்த விருந்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மத்திய மந்திரிகள், பல்வேறு மாநில முதல்வர்கள், பத்ம விருது பெற்றவர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்களும் இதில் பங்கேற்றனர். மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பழங்குடியின தலைவர்களும் விருந்தில் கலந்து கொண்டு பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் திரவுபதி முர்மு வரும் திங்கட்கிழமை நாட்டின் 15ஆவது புதிய குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொள்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.