;
Athirady Tamil News

வலி.மேற்கில் தொடரும் மணல் கடத்தல் – நேற்றும் மணல் கடத்தலுடன் தொடர்புடைய குற்றத்தில் ஒருவர் கைது!!

0

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தை வட்டுக்கோட்டை பொலிஸார் மடக்கி பிடித்து , சாரதியையும் கைது செய்துள்ளனர்,

சுழிபுரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு அருகில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மணலுடன் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரத்தையும் அதன் சாரதியையும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று சாரதியிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை பொன்னாலை தொடக்கம் சுழிபுரம் சவுக்கடி மற்றும் புளியந்துறை ஆகிய இடங்களில் தொடர்ந்து இரவு வேளைகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும், இவ்வாறான அத்துமீறிய இயற்கை வள அழிப்பை தடுத்து நிறுத்துமாறு கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற வலி.மேற்கு பிரதேச சபைக் கூட்டத்தில் பொன்னாலை வட்டார உறுப்பினர் ந.பொன்ராசா வாய்மொழி மூல கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.

குறித்த சட்டவிரோத சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு பொன்னாலைக்கும் சம்பில்துறைக்கும் இடையே பொலிஸ் காவலரண் ஒன்றை அமைக்குமாறும் பிரதேச சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.