ஜனாதிபதி விடுத்துள்ள விசேட பணிப்புரை !!
இன்று பிற்பகல் 3.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து போக்குவரத்து சபை டிப்போக்களில் இருந்தும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்கள் மற்றும் வேன்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு போக்குவரத்து அமைச்சருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துமாறும் உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
மீன்பிடி, சுற்றுலா மற்றும் விவசாயத் துறைகளுக்கு போக்குவரத்து சபை டிப்போக்கள் மற்றும் இராணுவ முகாம்களில் இருந்து எரிபொருளை விநியோகிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், எரிபொருட்களை பதுக்குபவர்களுக்கு எதிராக துரித நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.