;
Athirady Tamil News

கோவில்பட்டி புற்று கோவிலில் ஆடி கார்த்திகை சிறப்பு பூஜை..!!

0

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக் கோவிலில் ஆடி கார்த்திகை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.