தேசிய சபையை அமைக்க சஜித் நடவடிக்கை !!
மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தேசிய சபை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் இணைத்து குறித்த வேலைத்திட்டம் கட்டியெழுப்பப்படும் என்றார்.
தேசிய சபைக்கு கொண்டு வரப்படும் முற்போக்கான முன்மொழிவுகள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மக்கள் ஒன்றிணைந்து ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் மூலம் முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தாலும் அதன் பின்னர் ஏற்பட்டுள்ள நிலையானது, முன்னைய நிலையை விட மோசமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.