சிதம்பரபுரம் முன்பள்ளி கட்டிடம் திறப்பு விழா மற்றும் விளையாட்டு நிகழ்வு!! (படங்கள்)
வவுனியா சிதம்பரபுரம் முன்பள்ளி கட்டிடம் திறப்பு விழா நிகழ்வு இன்று (24) இளந்தளிர் முன்பள்ளி மற்றும் மலரும் மொட்டுக்கள் முன்பள்ளி ஆசிரியர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கலந்துகொண்டு சிதம்பரபுரம் இழந்தளிர் முன்பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்திருந்தார்.
நிகழ்வின் முன்னதாக முன்பள்ளி சிறார்களால் அதிதிகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டதுடன், மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.
அதனைத்தொடர்ந்து சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.நிரோசனின் பணிப்புரைக்கமைவாக நிகழ்வுக்கு வருகை தந்திருந்த சமூதாய பொலிஸ் அதிகாரி கெ. கீர்த்தனன் தேசிய கொடியை ஏற்றி வைத்ததனைத்தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனின் ஐந்து இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளி கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதுடன், முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வும் பிரதம அதிதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மலரும் மொட்டுக்கள் முன்பள்ளி கற்குளம் மற்றும் இளந்தளிர் முன்பள்ளி சிதம்பரபுரம் ஆகிய சிறார்களின் விளையாட்டு நிகழ்வின் பின் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் உலக சைவ தமிழ் மன்ற ஒன்றியத்தின் வவுனியா மாவட்ட தலைவர் ஏ.மாதவன், சமூக ஆர்வலர் பி.சிவகாந்தன், பிரதேச மட்ட முன்பள்ளி இணைப்பாளர் திருமதி.செல்வராணி, முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.