டி-56 ரபில் மீட்பு!!
பொல்துவ சந்தியில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காணாமல் போன ரி 56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தியவன்னா ஆற்றில் உள்ள பாலத்திற்கு கீழிருந்து குறித்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த துப்பாக்கியுடன் வெற்று தோட்டாப் பையொன்றையும் கண்டுபிடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி மற்றும் வெற்று தோட்டாக்களை கடற்படை அதிகாரிகள், வெலிக்கடை பொலிஸாரிடம் சமர்ப்பித்துள்ளதுடன் வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.