1950-ம் ஆண்டு குரங்கு அம்மை நோய் முதன் முதலில் ஆப்பிரிக்க நாட்டில் உருவானது..!!
கொரோனா உலகை அச்சுறுத்தியது போல் தற்போது புதிய வகை நோயாக குரங்கு அம்மை உலகம் முழுவதிலும் வேகமாக பரவி வருகிறது. தற்போது வரை 70 நாடுகளில் 16 ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குரங்கு அம்மை நோய் புதிய வைரஸ் கிடையாது ஆப்பிரிக்காவில் 50 ஆண்டுகளாக உள்ளது. இந்த நோய் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வருகிறது. குரங்கம்மை நோய் 2 வகையாக உள்ளது ஒன்று மத்திய ஆப்பிரிக்கா குரங்கம்மை மற்றொன்று மேற்கு ஆப்பிரிக்கா குரங்கம்மை. இது ஆக்டோ பாக்ஸ் வைரஸ் குடும்ப வகையையை சார்ந்ததாகும். கொரோனா வைரஸ் கண்களுக்கு தெரியாது.ஆனால் குரங்கம்மை வைரஸ் பெரிய அளவில் உள்ளதால் கண்களுக்கு தெரியும். மத்திய ஆப்பிரிக்காவில் காங்கோ என்ற இடத்தில் 1950-ம் ஆண்டு வனப்பகுதியை ஒட்டி உள்ள குடும்பத்தை சேர்ந்த 9 மாத குழந்தைக்கு குரங்கம்மை நோய் முதன் முதலில் பரவியது. வனப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் விலங்குகளிடம் இருந்து அங்குள்ள சில கிராமங்களில் உள்ள மக்களுக்கு இந்த நோய் எளிதில் பரவியது. வன விலங்குகளின் மாமிசம் சாப்பிடுவதாலும் இந்த நோய் மனிதர்களுக்கு எளிதாக பரவுகிறது. கடந்த 2003-ம் ஆண்டு இந்த வைரஸ் அமெரிக்காவுக்கு பரவியதால் 70 பேர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மற்ற நாடுகளுக்கும் இந்த நோய் பரவி வருகிறது. மேலும் எலி, குரங்கு, வண்டுகள் மூலமும் பரவுகிறது. நோய் தொற்று ஏற்படுவது உடனடியாக தெரியாது. 6 முதல் 13 நாட்கள் கழித்து உடலில் சிறிய அளவில் புண்கள் ஏற்பட்டு சொறி ஏற்படும். மேலும் சளி, இருமல், கழுத்து வலி, உடல் வலி, தலைவலி உண்டாகும். நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு 21 நாட்களுக்குப் பிறகு நோயின் தாக்கம் சிறிது சிறிதாக குறையும். பி.சி.ஆர். சோதனை மூலம் இந்த நோய் தொற்றை கண்டறியலாம் இதற்கு முன்பு குரங்கம்மை பாதித்தவர்களில் 100-க்கு 10 பேர் என இறப்பு இருந்தது. தற்போது 100க்கு 3 பேர் மட்டுமே இறக்கின்றனர்.எமினியு குளோபிலின் என்ற ஆன்ட்டி பயாடிக் மூலம் இந்த நோயை குணப்படுத்த முடியும். இந்தியாவில் தற்போது இமாச்சல் பிரதேசம், மணாலிலிருந்து டெல்லிக்கு உறவினர் திருமணத்திற்கு வந்த 34 வயது வாலிபருக்கு குரங்கமை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவரது ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதில் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெயபிரகாஷ் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் காமெட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு சொறி ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரை காமெட்டி அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர். இதையடுத்து ஐதராபாத் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். வாலிபரின் ரத்த மாதிரி பரிசோத னைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 6 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.