;
Athirady Tamil News

நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல வழிகாட்டியாக இருப்பேன்: புதிய ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் உரை..!!

0

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அவரது முதல் உரையில் கூறியிருப்பதாவது:- நம்பிக்கைக்கு அடையாளமாக விளங்கும் பாராளுமன்றத்தில் இருந்து மகக்ளை வணங்குகிறேன். கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடே வாக்குகள். என்னுடைய புதிய பொறுப்புகளை நிறைவேற்ற உங்களின் அன்பும், ஆதரவும் எப்போதும் தேவை. ஒரு சாதாரண பழங்குடியின கிராமத்தில் இருந்துதான் என்னுடைய வாழக்கைப் பயணத்தை தொடங்கினேன். நான் வந்த பின்னணியில் இருந்து ஆரம்பநிலை கல்வியை பெறுவது என்பது மிகப்பெரும் கனவாக இருந்தது. ஜனாதிபதி பதவியை அடைந்தது என்பது என்னுடைய தனிப்பட்ட சாதனை அல்ல. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழையின் சாதனை ஆகும். சாமானிய ஏழை மக்களின் கனவும் நிறைவேறும் என்பதற்கு நான் உதாரணமாக திகழ்கிறேன். வளர்ச்சிக்கான பாதையில் நாடு செல்வதற்கு வழிகாட்டியாக இருப்பேன். இளைஞர்கள் மற்றும் பெண்கள் நலனுக்காக பணியாற்றுவேன். கொரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் காட்டிய ஒத்துழைப்பு, துணிச்சல் வலிமையின் அடையாளம் ஆகும். ஒரு சில நாட்களுக்கு முன்புதான் இந்தியா 200 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது. இளைஞர்களின் தன்னம்பிக்கை மற்றும் ஆர்வத்தை நான் மிக நெருக்கமாக இருந்து உணர்ந்துள்ளேன். இவ்வாறு அவர் உரையாற்றினார். ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றி முடிந்ததும், அவர் ஜனாதிபதி மாளிகைக்கு புறப்பட்டார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.