;
Athirady Tamil News

இன்ஸ்டாகிராம்- பேஸ்புக் மோகம் கணவனை கள்ளகாதலனை ஏவி கொலை செய்த மனைவி..!!

0

இன்ஸ்டாகிராம் பைத்தியக்காரத்தனத்திற்கு மனைவி ஒருவர் தன் கணவனை பலிகொடுத்து உள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள லூனியில் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஜோத்பூரில் உள்ள ஒரு சாலையில் பைக் மீது கார் மோதி பைக்கை 200 மீட்டர் இழுத்து சென்றது. இதில் பயணம் செய்த ஆண்பென் இருவரும் அதே இடைத்தில் பலியானார்கள். இதனை அனைவரும் திட்டமிட்ட கொலை என்று கூறினர். ஆனால் எதற்காக இந்தக் கொலை நடந்தது என்பதுதான் எல்லோருக்கும் எழுந்த கேள்வி. இந்தக் கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த ரமேஷ் பட்டேலின் மனைவி பிரேமிகா குட்டி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நேரத்தை செலவிட்டு வந்தார். எப்போதும் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கும் மனைவியின் நடத்தையால் ரமேஷ் பட்டேல் கோபமடைந்தார். பல முறை எடுத்து கூறியும் பிரேமிகா திருந்தவில்லை. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட தொடங்கியது.

சமூகவலைதளத்தில் மயங்கி கிடந்த பிரேமிகா கணவன் இருந்தால் தன்னால் சமூகவலைதளங்களை கையாள முடியாது அதனால் கணவனை கொலை செய்ய திட்டமிட்டார். இந்த நிலையில் பிரேமிகாவுக்கு சங்கர் படேல் என்ற நபர் சமூக வலைதளம் மூலம் பழக்கமாகி உள்ளார் . இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பும் உருவாகியுள்ளது. பிரேமிகா சங்கரிடம் கணவர் ரமேஷ் பட்டேலை கொலை செய்ய வேண்டும் என கூறி உள்ளார். மோக போதையில் இருந்த சங்கர் படேல் கொலைக்கு திட்டம் போட்டு டெல்லியில் இருந்து பழைய எஸ்யூவி காரை வாங்கினார். மேலும், ரமேஷ் படேலின் நடமாட்டம் குறித்து பிரேமிகாவிடம் இருந்து தகவல்களை கேட்டறிந்தார். அதன்படி கடந்த ஜூலை 17ம் தேதி ரமேஷ் படேல் தனது உறவினர் கவிதாவை அழைத்துக்கொண்டு லூனியிலிருந்து ஜோத்பூருக்கு பைக்கில் புறப்பட்டார். லூனி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தை விட்டு வெளியேறும் போது, ​​பைக் மீது கார் மோதியது. என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் பைக்கை கார் சுமார் 200 மீட்டர் இருவரையும் இழுத்துச் சென்றது. இதில் ரமேஷ், கவிதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முதலில் இது பயங்கர விபத்து என கூறப்பட்டது கொலை ஏன் நடந்தது என்பது குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. இருவரையும் கொலை செய்தது யார் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. இந்த நிலையில் ரமேஷ் படேலின் குடும்பத்தினரிடமிருஎடுத்து விசாரணைமேற்கொண்டுள்ளனர். விசாரணையில், சங்கருடன் தனக்கும் முறைகேடான தொடர்பு இருப்பதாகவும் கூறினார். இது முன்கூட்டியே திட்டமிட்ட கொலை என குறித்து போலீசாருக்கு தெரியவந்தது. ஆனால், கவிதாவை ஏன் கொலை செய்தீர்கள் என்ற கேள்விக்கு, ரமேஷ் பட்டேலைக் கொல்லத்தான் நாங்கள் திட்டம் தீட்டினோம் எதிர்பாராதவிதமாக அன்று கவிதாவும் அவருடன் சென்றார். அதனால் தான் அவரும் கொலை செய்யப்பட்டதாக கூறினார். தற்போது பிரேமிகா உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.முக்கிய குற்றவாளி சங்கரை போலீசார் தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.