;
Athirady Tamil News

தமிழக மீனவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்..!!

0

கடந்த 20-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து படகில் மீன்பிடிக்கச் சென்ற 6 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். தற்போது தமிழகத்தைச் சேர்ந்த 92 மீன்பிடி படகுகள் இலங்கை வசம் உள்ளன. அவற்றில் சில படகுகள் 2018-ம் ஆண்டில் சிறைபிடிக்கப்பட்டதால், அவை முற்றிலும் சேதம் அடையக்கூடும். படகின் உரிமையாளர்கள் இலங்கை கோர்ட்டில் நேரில் ஆஜராகி உரிமை கோர வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் அந்த நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டனர். தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக அவர்களால் இலங்கை கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை. விடுவிக்க வேண்டும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க இந்திய அரசின் உயர்மட்ட அளவில் உறுதியான, ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இலங்கையில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு, மீன்பிடி படகின் உரிமையாளர்கள், இலங்கை கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கடந்த சில மாதங்களில் கைது செய்யப்பட்ட 18 மீனவர்களை சொந்த நாட்டுக்கு அழைத்துவர உதவியதற்கு மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.