ரணில் வழிநடத்தும் ராஜபக்ச – சம்பிக்க!!
ரணில் விக்ரமசிங்க வழிநடத்தி வரும் ராஜபக்ச அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்காக விரிவான அமைப்பை உருவாக்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் ஆகியவற்றுடன் இன்று 43 வது படையணி நடத்திய பேச்சுவார்த்தையின் போதே சம்பிக்க இனை கூறியுள்ளார்.
இதன் முதல் கட்டமாக நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை நிறைவேற்றும் போது அதற்கு எதிராக செயற்படுவோம். தற்போதைய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டு ஒரு நாள் கடந்து செல்லும் முன்னர் செயற்பட்ட விதத்தை அனுமதிக்க முடியாது.
ஜனாதிபதி செயலகத்தில் இருந்தவர்களை பேச்சுவார்தை மூலம், இணக்கப்பட்டின் மூலம் அப்புறப்படுத்தியிருக்கலாம்.
போராட்ட களத்தில் இருக்கும் போராட்டகாரர்கள் மீது கோபத்தில் இருக்கும் பொதுஜன பெரமுனவினருக்கு மகிழ்ச்சியை பெற்றுக்கொடுக்கவே பலத்தை பிரயோகித்துள்ளார்.
அதேபோல், எதிர்காலத்தில் தனக்கு எதிராக போராட்டம் நடந்தால், வழங்கும் தீர்வு இதுதான் என்பதை போராட்டகாரர்களுக்கு காட்டுவதும் ஜனாதிபதியின் நோக்கம்.
சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், சமூக செயற்பட்டாளர்கள் என அனைவரையும் இணைந்துக்கொண்டு விரிவான முன்னணியாக நாம் அந்த அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.