அரசாங்கம் குறித்து சர்வதேச ரீதியில் நம்பிக்கை ஏற்படவில்லை – எரான் விக்ரமரத்ன!!
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் குறித்து சர்வதேச ரீதியில் நம்பிக்கை ஏற்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.
நிரந்தரமான அரசியல் பலம் இல்லாத உண்மையான மக்கள் ஆணையை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசாங்கம் சம்பந்தமாக மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படாது.
சர்க்கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் அல்லது மீண்டும் பொதுத் தேர்தலை நடத்தி மக்கள் எதிர்பார்க்கும் விதத்திலான அரசாங்கம் உருவாக இடமளிக்க வேண்டும்.
தேர்தலில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டில் நிலவும் நெருக்கடியை தீர்ப்பதற்கு மேலும் பல காலம் செல்லும். அத்துடன் நெருக்கடிக்கு தீர்வுகாண ஜனரஞ்சகமாற்ற சில தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் எரான் விக்ரமரத்ன கூறியுள்ளார்.