செஸ் ஒலிம்பியாட் நடத்தும் வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை- முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில் தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள செஸ் விளையாட்டு வீரர்களை வரவேற்கிறேன். நேரு விளையாட்டு அரங்கிற்கு பன்னாட்டு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் விழா அமைந்துள்ளது. குஜராத் முதல்வராக இருந்த போது 20 ஆயிரம் வீரர்களுடன் செஸ் போட்டியை நடத்தியவர் பிரதமர் மோடி. வெறும் நான்கே மாதங்களில் பன்னாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பாக செய்தது. தமிழ்நாடுதான் இந்தியாவின் செஸ் தலைநகரமாக உள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்தும் வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்தது தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை. இதன்தொடக்க விழா மிக எழுச்சியோடு தொடங்கப்பட்டு உள்ளது. நேரு விளையாட்டு அரங்கத்திற்கு பன்னாட்டு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் விழா அமைந்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து முதல் அறிவிப்பை கடந்த மார்ச் 16 ஆம் நாள் நான் அறிவித்தேன். இதுபோன்ற பன்னாட்டு போட்டி தொடரை சிறப்பான முறையில் செயல்படுத்துவதற்கு 18 மாதங்கள் ஆகும். ஆனால் தமிழக அரசு நான்கே மாதங்களில் இதன் தொடக்க பணிகளை சிறப்பாக செய்துமுடித்துள்ளது. குறுகிய காலத்தில் சிறப்பாக செய்துமுடித்துள்ள விளையாட்டு துறையை சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் நான் மனதார பாராட்டி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.