;
Athirady Tamil News

பிரதமரின் கிசான் திட்டத்தில் உதவித்தொகை பெற விவசாயிகள் பதிவை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் வேளாண் இணை இயக்குனர் தகவல்..!!

0

தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) முகமது அஸ்லம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தர்மபுரி மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 92 விவசாயிகள் பயன் பெறுகிறார்கள். 4 மாதங்களுக்கு ஒரு முறை தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை பெறுகிறார்கள். இந்தத் திட்டத்தில் இதுவரை 11 தவணைகள் விடுவிக்கப்பட்டுள்ளது.தற்போது 12- வது தவணை நிதி உதவி பெற திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயிகளின் ஆதார் எண் அடிப்படையில் நிதி விடுவிக்கப்படும். எனவே விவசாயிகள் (www.pmkisan.gov.in) என்ற இணையதளத்தில் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து ஓ.டி.பி. பெற்று அதை பதிவு செய்து ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ள வேண்டும். பிரதமரின் கிசான் திட்டத்தில் உதவித்தொகை பெறும் விவசாயிகள் 12- வது தவணையைப் பெற தங்கள் பதிவை நாளை மறுநாளுக்குள் (ஞாயிற்றுக்கிழமை) கட்டாயம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு உறுதி செய்தவர்களுக்கு மட்டுமே 12- வது தவணை உதவித்தொகை விடுவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.