பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது 8 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரிப்பு- பிரதமர் மோடி பேச்சு..!!
குஜராத் மாநிலம் சபார் பால் பண்ணையில் இன்று பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:- பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது கடந்த 8 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்திருக்கிறது. 2014ம் ஆண்டுக்கு முன்பு 40 கோடி லிட்டர் கலக்கப்பட்ட நிலையில், இப்போது 400 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது. பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதால் விவசாயிகளின் வருமானமும் அதிகரித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்துவதற்காக தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் பலன் இப்போது தெரிகிறது. விவசாயம் தவிர, கால்நடை வளர்ப்பு, மீன்பிடித்தல் மற்றும் தேன் உற்பத்தி போன்ற வணிக நடவடிக்கைகளை ஊக்குவித்ததும் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க செய்துள்ளது. கால்நடைகள் பிளாஸ்டிக்கை உட்கொள்வதால் பிளாஸ்டிக்கை தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு பிரதமர்மோடி பேசினார்.