விஜயவாடா கோவிலுக்கு ரூ.1.50 கோடியில் வைர கிரீடம்- சென்னையில் தயாரிக்கப்பட்டது..!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற சத்தியநாராயண சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சாமிக்கு அதே பகுதியை சேர்ந்த சத்திய பிரசாத் குடும்பத்தினர் நேற்று வைர கிரீடம் வழங்கினர். 682.23 கிராம் தங்கம் மற்றும் 90 சதவீத வைரக் கற்கள் பதித்த கிரீடத்தை சாமிக்கு காணிக்கையாக வழங்கினர். இந்த கிரீடம் சென்னையில் உள்ள தனியார் நகைக்கடை மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.1.50 கோடி என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
https://www.maalaimalar.com/news/national/tamil-news-rs150-crore-worth-diamond-crown-at-vijayawada-temple-492713?infinitescroll=1