மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் சாத்தியம் !!
நாட்டில் நாளாந்தம் 14 மணித்தியாலங்கள் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் சாத்தியம் காணப்படுவதாக முன்னிலை சோசலிச கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிலக்கரியைக் கொள்வனவு செய்வதற்கு 320 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை என மின்சார சபை திறைசேரிக்கு அறிவித்துள்ளதாக முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
எனினும் திறைசேரி குறித்த கோரிக்கையை நிராகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.