;
Athirady Tamil News

கோவிலை அடித்து சென்ற ஆற்று வெள்ளம்..!!

0

கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. அம்மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. ஆந்திர மாநிலத்தில் கோதாவரி ஆறு பொங்கிப்பாய்கிறது. இந்நிலையில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் புருசோத்தபட்டின கிராமத்தில் கோதாவரி ஆற்றங்கரையில் ஒரு வனதுர்க்கை அம்மன் கோவில் அமைந்திருந்தது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்வார்கள். நேற்று முன்தினம், சிரவண மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அப்போது கோதாவரி ஆற்றில் சீறிப் பாய்ந்த வெள்ளத்தில், கோவிலை ஒட்டிய கரை படுவேகத்தில் கரைந்தது. கோவிலை தாங்கி நின்றிருந்த தூண்கள் ஆட்டம் கண்டன. அபாயத்தை உணர்ந்த பக்தர்கள், கோவிலை விட்டு வேகமாக வெளியேறினர். அவர்கள் அனைவரும் கரையில் நின்றபடி பீதியுடன் பார்த்துக்கொண்டிருக்க, வனதுர்க்கை அம்மன் கோவில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதை பலர் தங்கள் செல்போன்களில் வீடியோ படம் எடுத்தனர். அந்தக் காட்சி, சமூக ஊடகங்களில் பரபரப்பாக பரவிவருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.