பீகாரில் புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்ததில் தொழிலாளர்கள் பலர் காயம்..!!
பீகாரில் கதிஹார் பராரி என்ற இடத்தில் பாலம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், திடீரென அந்த பாலம் நேற்று இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் பலர் காயம் அடைந்து உள்ளனர். இதன்பின்னர் உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு பூர்னியாவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதுபற்றி ராஷ்டீரிய ஜனதா தள எம்.எல்.ஏ. நீரஜ் யாதவ் கூறும்போது, துறை அதிகாரிகளின் அலட்சியத்தினால் இந்த சம்பவம் ஏற்பட்டு உள்ளது. 2 குழந்தை தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனை நிர்வாகம் மூடி மறைத்து உள்ளது என தெரிவித்து உள்ளார். எனினும், ஆளும் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ. விஜய் சிங் கூறும்போது, இது ஒரு வருத்தத்திற்குரிய சம்பவம். 5 முதல் 6 மாதங்களுக்கு முன்பு பாலத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும். இதற்கு பொறுப்பான ஒருவரும் தப்பி விட முடியாது என கூறியுள்ளார்.