மீண்டும் இராணுவ பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை!!
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து அகற்றப்பட்ட இராணுவப் பாதுகாப்பை மீள வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக பெட்ரோலிய பாவனையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாதுன்ன தெரிவித்தார்.
முன்னதாக இராணுவப் பாதுகாப்பு நிலையில், அது நீக்கப்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை எனவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையாற்றிய இராணுவத்தினர் மீள அனுப்பப்பட்டால் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பத்தில் ஈடுபட்டிருந்த 13 இற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.