அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு..!!
செம்பனார்கோவில் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு செய்தார்.
அத்தியாவசிய பொருட்களின் தரம்
செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டானில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் நேற்று மயிலாடுதுறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், கிடங்கிலிருந்து தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள 90 ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரம், பொருட்களின் இருப்பு, குறித்து ஆய்வு செய்தார்.இது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் கூறியதாவதுமயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமான ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தரமான ரேஷன் பொருட்கள் வழங்க வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
18-ந் தேதிக்குள்
மேலும் ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் குறித்து ஏதேனும் புகார் இருந்தால் வட்ட வழங்கல் அலுவலர்களிடம் மனுவாக அளிக்கலாம். புகார் தொடர்பாக ஆய்வு செய்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.மேலும், இந்த மாதத்துக்கான ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் ரேஷன் பொருட்களின் நகர்வு பணியை வருகிற 18-ந் தேதிக்குள்(வியாழக்கிழமை) முடிக்க தரக்கட்டுப்பாட்டு அலுவலர் ராகவனிடம் அறிவுறுத்தினார்.