இலங்கைக்கு வரும் சீனாவின் உளவு கப்பல்… ரணில் விக்கிரமசிங்கேவுக்கு இடியாப்ப சிக்கல்!
இலங்கைக்கு வரும் சீனாவின் உளவுக் கப்பல் அந்நாட்டின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவுக்கு இடியாப்ப சிக்கலாக உருவெடுத்துள்ளது.
பொருளாதார, அரசியல் நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கைக்கு புதிய தலைவலியாக, உளவு கப்பலை அனுப்பி வைக்கிறது சீனா. இலங்கையின் அம்பாந்தோட்டா துறைமுகத்தில் ஒரு வார காலம் இந்த உளவு கப்பல் நங்கூரமிட்டு நிற்கும்.
இந்த உளவு கப்பல் மூலம் தென்னிந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகள் அனைத்தும் சீனாவால் எளிதாக கண்காணிக்கப்படும். ஆகையால் இந்தியா இதற்கு தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனாலும் இந்தியாவின் எதிர்ப்பை மீறி, சீனா உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்துள்ளது. இது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உளவு கப்பல் விவகாரம் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கே கூறியதாவது: சீனக் கப்பல் வருவதற்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
இந்த விடயத்தை உள்ளக சக்திகளும், வெளியகச் சக்திகளும் சுயநல அரசியலுக்கும், தத்தமது பலங்களை நிரூபிப்பதற்கும் பயன்படுத்த முயல்கின்றனர். இலங்கையைப் பொறுத்தவரையில் எந்த நாட்டையும் பகைக்கவேண்டிய, மோதவேண்டிய நிலைமை கிடையாது. வரலாறு காணாத பொருளாதார அடியால் விழுந்து கிடக்கின்றது இலங்கை. அதிலிருந்து மெல்ல மெல்ல இலங்கை இப்போதுதான் எழுகின்றது.
எங்கள் நாட்டின் வெளிவிவகாரம் சம்பந்தமாக நாங்கள்தான் தீர்மானிப்போம். இதில் வெளிச்சக்திகள் தலையிட முடியாது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக முடிவெடுக்கும் போது அரசாங்கமும், பாதுகாப்புத் தரப்பினரும் இணைந்து முடிவெடுப்பர். இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
அம்பாந்தோட்டா துறைமுகத்துக்கு சீனாவின் உளவு கப்பல்- ஒருவழியாக ஒப்புக் கொண்டது இலங்கை.. ஆனால்?
இலங்கை பொருளாதாரம் : அடுத்த 6 மாதங்களில் வரிசைகட்டி நிற்கும் பிரச்னைகள்!! (படங்கள்)
கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு உதவ முடியாது. . கை விரித்த உலக வங்கி!! (படங்கள்)
கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு உதவ முடியாது. . கை விரித்த உலக வங்கி!! (படங்கள்)
அமரகீர்த்தி கொலை வழக்கு; மேலும் 8 பேருக்கு வலைவீச்சு!! (வீடியோ)
சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் அழைப்பு!!
ஆர்ப்பாட்டகாரர்களுக்கு ஆதரவாக மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்!!
நள்ளிரவு முதல் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு! அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!!
அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் குறைக்கப்படும்!!
இலங்கையில் கொந்தளிப்புக்கு மத்தியில் ராணுவம் கட்டுப்பாட்டுடன் செயல்படக்காரணம் என்ன? (படங்கள்)
கொழும்பில் மற்றுமொரு போராட்டம்! புகையிரத நிலையத்திற்கு முன்னால் திரண்ட போராட்டக்காரர்கள்!!
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே உள்ளனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!!
போராட்டங்களுக்கு செவிசாய்க்க தயார்! ஆனால் பயங்கரவாதத்தை ஏற்க மாட்டோம்: பிரதமர்!!
இலங்கையில் இயல்புநிலை திரும்புகிறதா? எரிபொருள் நிலையங்களில் குறையும் கூட்டம்!! (படங்கள்)
கோத்தபய தப்பி ஓடவில்லை. . விரைவில் வந்துவிடுவார். . இலங்கை அமைச்சர் பேச்சு!! (படங்கள்)
பொருளாதார மீட்சிக்கு வலியுடன் கூடிய சிகிச்சை வேண்டும் – இந்திரஜித் !!
செப்டெம்பரில் இலங்கைக்கு புதியதொரு நெருக்கடி – பாக்கியசோதி!!