;
Athirady Tamil News

எரிபொருள் அனுமதிப்பத்திரம் தொடர்பில் புதிய அறிவிப்பு !!

0

முடிந்தளவு விரைவாக எரிபொருளுக்கான புதிய அனுமதிப் பத்திரத்தை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என, இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான புதிய முறையை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. இதுவரையில் 51 இலட்ச வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவையின் பணிப்பாளர் தசுன் ஹெகொட தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் முதலாம் திகதி மாத்திரம் 6 இலட்ச வாகனங்கள் QR முறையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 726 எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், ஐ.ஓ.சிக்கு சொந்தமான 132 எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இந்த புதிய முறை அமல்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பவர்களை இனங்காணவும், அவர்களுக்கு எதிராக விரைவாக சட்டநடவடிக்கை எடுக்கவும் இந்த முறையின் கீழ் முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.