ஊக்கமருந்து விவகாரம்- தமிழக வீராங்கனை தனலட்சுமிக்கு 3 ஆண்டு தடை..!!
காமன்வெல்த் விளையாட்டு போட்டி கடந்த ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழ்நாடு தடகள வீராங்கனை தனலெட்சுமி (100 மீட்டர் மற்றும் தொடர் ஓட்டம் )இடம் பெற்றிருந்தார். கஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் தமிழ்நாடு வீராங்கனை தனலட்சுமி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு தடைக்காலம் 3 ஆண்டுகளாக குறைத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட தனலட்சுமி தவறை ஒப்புக்கொண்டதால் தண்டனை 4 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழக தடகள வீரர் மகிமைராஜ் 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.