யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் நடைபெற்றது.!! (படங்கள்)
யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்று மாவட்டச்செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் புகையிரதத்திணைக்களத்தின் பாவனைக்கு உட்படுத்தாத நிலத்தை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துதல், பாடசாலைகள் , கோயில்கள், தேவாலயங்கள் , வீடுகளில் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளுதல், உணவுப்பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் பால் , முட்டை என்பவற்றுக்கான தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள், சிறு போக மற்றும் பெரும்போக விவசாயத்திற்கான விதைகள், பசளைகள், கிருமிநாசினி ஆகியவற்றை பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகள், வங்கிகள் விவசாயிகளுக்கு கடனுதவிகளை வழங்குதல், பயிர்செய்கைகளுக்கான எரிபொருள் உடனடித்தேவையை உறுதிப்படுத்தல், விதை நெல் தேவைப்பாடு மற்றும் விதை நெல் விலையை தீர்மானித்தல் ,தென்னை மரத்தை தாக்கும் பீடை கொல்லி மருந்தின் தட்டுப்பாடு , தென்னந்தொழிற்சாலை உற்பத்திகளை ஊக்குவித்தல் , மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் விநியோகம் ஆகியன தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இவ் விவசாயக் குழுக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்டச் செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர்,மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், விவசாய துறை சார் திணைக்களத் தலைவர்கள், வங்கி முகாமையாளர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”