10 ஆண்டுகளுக்கு மேலாக சுப்ரீம் கோர்ட்டில் 10,491 வழக்குகள் நிலுவை..!!
சுப்ரீம் கோர்ட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக 10 ஆயிரத்து 491 வழக்குகள் நிலு சுப்ரீம் கோர்ட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக 10 ஆயிரத்து 491 வழக்குகள் நிலுவையில் உள்ளன.வையில் உள்ளன. இந்த தகவல், மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ அளித்த பதிலில் இடம் பெற்றுள்ளது. எழுத்து மூலம் வழங்கப்பட்ட இந்த பதிலில் இடம் பெற்றுள்ள பிற முக்கிய தகவல்கள்:-
* சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2-ந்தேதி நிலவரப்படி மொத்தம் 71 ஆயிரத்து 411 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 42 ஆயிரம் வழக்குகள் 5 ஆண்டுகளுக்குள் நிலுவையில் இருக்கின்றன. 18 ஆயிரத்து 134 வழக்குகள் 5-10 வருடங்களாக நிலுவையில் உள்ளன.
* கடந்த மாதம் 29-ந்தேதி நிலவரப்படி நாட்டின் ஐகோர்ட்டுகளில் 59 லட்சத்து 55 ஆயிரத்து 907 வழக்குகள் தேங்கி உள்ளன. 2016 உடன் ஒப்பிடுகையில் இது 50 சதவீதம் அதிகம்.
இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.