இன்றைய நாணய மாற்று விகிதம்! டொலரின் பெறுமதி தொடர்ந்து உயர்கிறது!!
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 19 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 51 சதமாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.
எவ்வாறாயினும், யூரோவிற்கு எதிராக ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 378.58 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 363.45 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 449.10 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 431.53 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.