;
Athirady Tamil News

உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய ஆந்திராவை சேர்ந்த 9 தனியார் பஸ்கள் ‘ஜப்தி’..!!

0

உரிய ஆவணங்கள் இல்லை
வெளி மாநிலங்களில் இருந்து கோலார் மார்க்கமாக பெங்களூருவுக்கு அனுமதியின்றி ஏராளமான பஸ்கள் இயங்குவதாக போக்குவரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் மாநில போக்குவரத்துத்துறை கமிஷனரின் உத்தரவின் பேரில் கோலார் மாவட்ட போக்குவரத்து துறை கமிஷனர் மல்லிகர்ஜூன் மற்றும் கூடுதல் கமிஷனர் ஓங்காரேஷ்வரி மற்றும் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கர்நாடகா-ஆந்திர மாநிலங்களின் எல்லையான முல்பாகலில் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

9 பஸ்கள் பறிமுதல்
அப்போது ஆந்திராவில் இருந்து முல்பாகல் சோதனை சாவடி மார்க்கமாக கோலார் மற்றும் பெங்களூருவுக்கு சென்ற தனியார் பஸ்களை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்தனர். அதில் ஆந்திராவில் இருந்து வந்த 9 பஸ்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த பஸ்கள் ‘ஜப்தி’ செய்யப்பட்டது. மேலும் பஸ்களின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.