வீட்டில் பதுக்கிய 41 மூட்டை ரேஷன் அரிசி சிக்கியது..!!
உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா தல்லூர் கிராமத்தில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக உணவுபொருள் வினியோக துறை, குந்தாப்புரா போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்பேரில் அதிகாரிகள், போலீசாருடன் அந்த கிராமத்திற்கு விரைந்து சென்று சந்தேகப்படும்படியான வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியை சோ்ந்த முனாப் என்பவர் வீட்டில் சோதனை நடத்திய போது அங்கு ரேஷன் கடைகளில் அன்னபாக்யா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 41 அரிசி மூட்டைகள் இருந்துள்ளது. ேமலும் நடத்திய சோதனையில் மின்னணு எடை எந்திரமும் இருந்துள்ளது. இந்த ஒவ்வொரு மூட்டைகளும் தலா 50 கிலோ எடை உடையது. இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 41 அரிசி மூட்டைகளையும், எடை எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.45 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார், முனாப்பை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.