;
Athirady Tamil News

தனியாக வசிக்கும் பெண்களை வலையில் வீழ்த்தி மோசடி- பெண்களிடம் நகை பறித்து சென்ற வாலிபர் கைது..!!

0

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கோட்டா மண்டலத்தை சேர்ந்தவர் சந்திரா. இவர் சிறு வயதிலேயே பெற்றோரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். சில ஆண்டுகள் கூடூர் மற்றும் திருப்பதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தார். அப்போது வீட்டில் தனிமையில் வசிக்கும் பெண்களிடம் நைசாக பேசி தனது வலையில் வீழ்த்தி அவர்களிடம் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். பெண்களிடம் தங்க நகை வியாபாரம் செய்வதாக கூறி வசதியானவரைப் போல் காட்டிக் கொண்டார். பல பெண்களை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று தூக்க மாத்திரை கொடுத்து மயக்கத்தில் உல்லாசமாக இருந்த நேரத்தில் அவர்கள் அணிந்திருந்த நகைகளை அபகரித்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளார். இவரால் ஏமாற்றப்படும் பெண்கள் சிலர் வெளியில் சொன்னால் அவமானம் என கருதி புகார் தெரிவிக்கவில்லை. மாநிலம் முழுவதும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது திருப்பதி, நெல்லூர், விஜயவாடா, குண்டூர் உள்ளிட்ட 7 போலீஸ் நிலையங்களில் 30 வழக்குகள் உள்ளது. 2010-ம் ஆண்டு முதல் 12 ஆண்டுகளாக பெண்களை ஏமாற்றி நகைகளை பறித்து சென்றுள்ளார். 2 முறை சிறைக்கு சென்று வந்துள்ளார். கடந்த ஜூன் மாதத்தில் விஜயவாடாவில் உள்ள பவானிபுரத்தை சேர்ந்த பெண்ணிடம் பேசத் தொடங்கி ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் குளிர்பானத்தில் மயக்கம் மருந்து கலந்து கொடுத்து உல்லாசமாக இருந்துள்ளார். மயங்கிய நிலையில் இருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து 5 பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றார். அதேபோல் கிருஷ்ணா லங்காவில் மற்றொரு பெண்ணை ஏமாற்றி 10 பவுன் நகை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். இது குறித்து பாதித்த பெண் ஒருவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணா நகர் பஸ் நிலையம் அருகே பதுங்கி இருந்த சந்திராவை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.