துணை ஜனாதிபதி தேர்தல்- மம்தா பானர்ஜி உத்தரவை மீறி ஓட்டு போட்ட 2 எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்ய முடிவு..!!
துணை ஜனாதிபதி தேர்தல் நேற்று நடந்தது. இதில் பாராளுமன்ற எம்.பிக்கள் மேல்சபை மற்றும் நியமன எம்பிக்கள் ஓட்டு போட்டனர். மொத்தம் 725 எம்.பிக்கள் வாக்களித்தனர். இந்த தேர்தலில் 528 ஓட்டுக்கள் பெற்று பாரதிய ஜனதா வேட்பாளர் ஜெகதீப் தன்வர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட மார்க்ரெட் ஆல்வா 182 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதில் 2 பாரதிய ஜனதா உள்பட 55 எம்.பி.கள் ஓட்டு போட வில்லை். துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க போவதாக மேற்கு வங்காள முதல்-மந்திரியும்திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்து இருந்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இரு அவைகளிலும மொத்தம் 39 எம்,பி.க்கள் உள்ளனர். இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பிக்களான சிசிர் குமார் அதிகாரி மற்றும் சுவேந்து அதிகாரி ஆகிய 2 பேரும் கட்சி உத்தரவை மீறி ஓட்டு போட்டனர். இவர்கள் 2 பேரும் தந்தை-மகன் ஆவார்கள். அவர்கள் யாருக்கு ஆதரவாக வாக்களித்தனர் என தெரியவில்லை, இது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இதையடுத்து 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க திரிணாமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பாராளுமன்ற சபாநாய கருக்கு கடிதம் அனுப்பபட்டு உள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற தலைவர் சுதீப்பாண்டோபதி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- துணை ஜனாதிபதி தேர்தலில் எங்கள் கட்சி எம்.பிக்.கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என தெரிவித்து இருந்தோம். ஆனால் அதை மீறி சிசிர் குமார் அதிகாரியும், திப்யேந்து அதிகாரியும் ஓட்டு போட்டு உள்ளனர். அவர்கள் இப்போது எந்த பக்கம் உள்ளார்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது. அதற்கான நடவடிக்கையை கட்சி தீர்மானிக்கும். கட்சி கட்டுப்பாட்டை மீறி அவர்கள் வாக்களித்து உள்ளதால் 2 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பாராளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் அனுப்பபட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.