நவீன உபகரணங்கள் இல்லாமல் மின்வாரிய ஊழியர்கள் தவிப்பு..!!
வால்பாறை பகுதியில் நவீன உபகரணங்கள் இல்லாததால் மின் வாரிய ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மின்சார வாரியம்
வால்பாறை, ஆண்டு முழுவதும் மழைபெய்யக்கூடிய ஒரு மலைப் பிரதேசம் ஆகும். இங்கு தேயிலை பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இது போல் பல்வேறு அரசுத் துறைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமான துறையாக தமிழ்நாடு மின் சார வாரியம் உள்ளது. இதற்கு மழை காலங்களில் மின்வாரிய ஊழியர்களின் செயல்பாடே காரணமாக கூறப்படுகிறது. ஆனால் வால்பாறையில் பணிபுரியம் மின்வாரிய ஊழியர்க ளுக்கு நவீன உபகரணங்கள் ஏதும் வழங்கப்படாத நிலை உள்ளது. இதனால் அவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் மின்கம்பங்களில் ஏறி பணியாற்றும் அவல நிலை உள்ளது.
உயிர் பணயம்
மேடும், பள்ளமும் நிறைந்த வால்பாறையில் பல இடங்களில் மின்கம்பங்கள் பாசி படிந்தும் நேராக இல்லாமலும் உள்ளது. அதில் ஏறும் போது ஊழியர்கள் தவறி விழுவதற்கு வாய்ப்பு உள்ளது.
எனவே அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட கயிறு, கம்பி கையுறை உள்ளிட்ட உபகரணங்களை உடனடியாக வழங்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- வால்பாறை போன்ற மலைப்பகுதியில் மின்வாரிய ஊழியர் களின் பணி முக்கியமானது. மழை காரணமாக மண்சரிவு, மரம் விழுவது, மின் தடை போன்றவை ஏற்படுகிற போது மின்சார வாரிய ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து எந்த உபகரணங்களும் இன்றி பணியாற்றுகின்றனர்.
நவீன உபகரணங்கள்
ஆனால் அவர்களுக்கு நவீன உபகரணங்கள் வழங்க வேண்டும். அப்போது மின்ஊழியர்கள் ஆபத்தில் சிக்கி உயிரிழப்பதை தடுக்க முடியும். சமவெளி பகுதியில் மின்கம்பத்தில் கோளாறுகளை சரி செய்ய லாரியில் பொருத்திய ஏணிகளை பயன்படுத்துகின்றனர். அது போன்ற வசதி வால்பாறையில் இல்லை. இதனால் மழை காலத்தில் மின்கம்பத்தில் ஊழியர்கள் ஏறும் போது வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் மின் வாரிய பணியாளர்கள் உபகரணங்களுடன் சம்பவ இடங்களுக்கு செல்ல வாகன வசதி இல்லை. இதனால் கொட்டும் மழையில் லாரியில் அமர்ந்து நனைந்த படியே செல்ல வேண்டியது இருக்கிறது. எனவே மலைப்பிரதே சமான வால்பாறையில் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க மின்வாரிய ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் போதுமான நவீன உபகரணங்களை வழங்க வேண்டும். இதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.