மத்திய கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவு வெளியீடு..!!
நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி., என்.ஐ.டி உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை ஜே.இ.இ. முதன்மை தேர்வு அடிப்படையில் நடை பெறுகிறது. 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான ஜே.இ.இ. நுழைவு தேர்வு இரண்டு அமர்வுகளாக நடந்தது. முதலாவது அமர்வுக்கான மதிப்பெண் பட்டியல் ஜூலை 10-ந் தேதி அறிவிக்கப்பட்டது. 2-வது அமர்வு தேர்வு ஜூலை 25-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடந்தது. இதில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இந்த நிலையில் ஜே.இ.இ. மெயின் தேர்வு 2-வது அமர்வின் முடிவுகளை இன்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 24 பேர் 100 சதவீத மதிப் பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்து உள்ளார்கள்.