பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது..!!
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடரின் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்தக் கூட்டத் தொடரில் அக்னிபாத், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பின. கடும் அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. வரும் 12-ம் தேதி வரை நடைபெறவிருந்த நிலையில் முன்னதாகவே நிறைவடைந்துள்ளது. இதையடுத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.