18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோர்பவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி..!!
கொரோனாவை தடுக்க 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு கோர்பவேக்ஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. உள்நாட்டிலேயே தயாரான இந்த தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்துவது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்அடிப்படையில் நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு பூஸ்டர் தடுப்பூசியாக கோர்பவேக்சை பயன்படுத்தலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதைஏற்று 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோர்பவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள மத்திய அரசு இன்று அனுமதி அளித்து உள்ளது. இதனால் கோவாக்சின், கோவிஷீல்டு முதல் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 3-வதாக இந்த பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.