காட்டுயானை அட்டகாசத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் ராஜினாமா செய்வேன்- எச்.கே.குமாரசாமி பேட்டி..!!
ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புராவில் கடந்த சில மாதங்களாக காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்த அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் மாநில அரசுக்கு மற்றும் எல்.எல்.ஏக்களுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இது குறித்து நிருபர்களை சந்தித்து பேட்டியளித்த ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எச்.கே குமாரசாமி எம்.எல்.ஏ கூறியதாவது:- ஹாசன் மாவட்டத்தில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகம் உள்ளது. இதனால் காபிச்செடி தோட்டங்கள், விளை நிலங்கள் நாசமாகிறது. வீடுகளுக்கு புகுந்து பொருட்களை சூறையாடுவது, வனப்பகுதிக்கு செல்லும் விவசாயிகளை தாக்கி கொல்வது என்று யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்த யானைகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசு பல முறை மக்கள் சார்பில் எம்.எல்.ஏ. என்ற முறையிலும் கோரிக்கை வைக்கப்பட்டுவிட்டது. இனிமேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்வேன்.