சம்பள அதிகரிப்பு தொடர்பில் மற்றுமொரு கோரிக்கை!!
தற்போதைய வாழ்வாதார சூழ்நிலைக்கு ஏற்ப பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் குறைந்தது ஒரு நாளைக்கு 3250 அதிகரிக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட மலையக மக்களின் வேதன அதிகரிப்பு தொடர்பாக தொழில் அமைச்சில் இன்றைய தினம் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே, இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அத்துடன், வழமை மாறாத சலுகைகளும் வழங்கப்படல் வேண்டும் கடந்த காலங்களில் பெருந்தோட்ட நிறுவனங்களின் அடாவடி செயற்பாடுகளினால் பெருந்தோட்ட மலையக மக்கள் பெரிதளவு பாதிக்கப் பட்டிருந்தார்கள்.
பெருந்தோட்ட கம்பனிகளின் அடாவடி செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி இடவேண்டும்.
.ஆகவே கூட்டு ஒப்பந்தத்தில் காணப்பட்ட முக்கிய சரத்துக்களுடன் தற்போதைய வாழ்வாதார சூழ்நிலைக்கு ஏற்புடையதாக பெருந்தோட்ட மலையக மக்களின் வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும்.
நாட்டினுடைய தொழில் சட்டம் பெருந்தோட்ட மலையக மக்களுக்கும் பொதுவானது என்பதனை பெருந்தோட்ட நிறுவனங்களும் உணர வேண்டும்.
ஆயிரம் ரூபாய் வேதன வழக்கில் ஆரம்பம் முதல் இறுதி வரை தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுத்த இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மலையக மக்களின் உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்தும் செயற்படும் என்றார்.