;
Athirady Tamil News

இலங்கைக்கான 12 திட்டங்களின் நிதியளிப்பை திடீரென நிறுத்திய நிறுவனம்!!

0

ஜப்பானிய சர்வதேச நிதியமான ஜெய்க்கா, இலங்கையில் நிதியளித்து வந்த 12திட்டங்களுக்கான தமது நிதியளிப்பை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அந்த நிதியம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த இரண்டாவது முனைய விஸ்தரிப்புக்காக ஜப்பானிய தாய்சேய் நிறுவனத்துக்கான நிதியை ஜெய்க்கா நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, ஜெய்க்கா நிறுவனம், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஜப்பானின் 12 திட்டங்களுக்கான நிதியை ரத்துச்செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

சர்வதேச நாடுகளிடம் இலங்கை பெற்ற கடன்கள்
இலங்கை, சர்வதேச நாடுகளில் இருந்து பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்தப்போவதில்லை என்று அறிவித்திருந்த நிலையிலேயே ஜெய்க்கா நிறுவனம், இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டுக்கு வரும் வரையிலேயே இந்த நிதி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஜெய்க்கா நிதியம் அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.