தாய்லாந்தை சென்றடைந்த கோட்டா !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தாய்லாந்தை வந்தடைந்தார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோட்டாபய ராஜபக்ஸ சிங்கப்பூரிலிருந்து பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட தனியார் வாடகை விமானம் மூலமே தாய்லாந்தை சென்றடைந்துள்ளார் என ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜூலை மாதம் இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சியையடுத்து, மாலைத்தீவுக்கு சென்ற கோட்டாபய ராஜபக்ஸ, ஜூலை மாதம் 14ஆம் திகதி சிங்கப்பூரை செயன்றடைந்தார்.
இதனையடுத்து 28 நாட்களாக சிங்கப்பூரில் தங்கியிருந்த அவர், இன்று தாய்லாந்தை சென்றடைந்துள்ளார்.