35,000 மெட்றிக் தொன் பெட்ரோல் தரையிறக்கப்படவுள்ளது !!
35,000 மெட்றிக் தொன் பெட்ரோல் தரையிறக்கப்படவுள்ளதென எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் உதவியுடன் நேற்று இரவு குறித்த பெட்ரோலுக்கான கட்டணத்தை செலுத்தியுள்ளதாகவும் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கமைய, நாளைய தினம் அதனை தரையிறக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.