நல்லைக்குமரன் நூல் வெளியீடும் , யாழ் விருது வழங்கலும்!! (படங்கள்)
யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகார குழுவினரால் நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவினை முன்னிட்டு வெளியிடப்படும் நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழா இன்றைய தினம் இடம்பெற்றது.
நாவலர் மண்டபத்தில் இன்று காலை 9மணியவில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனால் நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு வைக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகாரக்குழு வழங்கி கௌரவிக்கின்ற யாழ் விருது இந்த ஆண்டு திருக்கேத்தீச்சர ஆலய திருப்பணிச் சபையினருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது திருக்கேத்தீச்சர ஆலய திருப்பணிக்கு உதவிய யாழ்ப்பாணத்திற்கான இந்திய தூணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனுக்கும் சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டது.
யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகார குழுவினரால் சைவத்திற்கும் தமிழுக்கும் சமூகத்திற்கும் தொண்டாற்றியவர்களைக் கௌரவித்து ‘யாழ் விருது’ வருடாவருடம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஸ்வரன், நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், வீணாகான குருபீடத்தின் சிவஸ்ரீ சபா வாசுதேவக்குருக்கள், செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன், யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறைத் தலைவர் ச.முகுந்தன், தேசிய கல்வியற் கல்லூரி ஓய்வுநிலைப் பீடாதிபதி தி.கமலநாதன், மாநகர சபையின் சைவ சமய விவகார குழு உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”