ஆந்திராவில் தனக்கு தானே சிலை வடித்த சிற்பி மரணம்..!!
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், பாண்டா பகுதியை சேர்ந்தவர் பட்நாயக் (வயது 97). பட்நாயக் சிறு வயது முதலே விதவிதமான ஓவியங்களை வரைந்து வந்தார். மேலும் சிற்பக்கலை மீது பற்று கொண்டு இருந்தார். கடந்த 1975 ஆம் ஆண்டு குண்டூரில் உள்ள சிற்பக்கலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினராகவும் இருந்தார். அப்போது உலக தலைவர்களின் உருவங்களை தத்துரூபமாக சிலைகளாக வடித்தார். இவருக்கு ஆந்திர மாநில அரசு கலா ரத்னா, வசிஷ்ட புலஸ்கார், பயோ சேஷ்ட அவார்ட் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவித்தது. தனக்கு தானே சிலை வடிவமைத்து அந்த சிலையுடன் போட்டோ எடுத்துள்ளார். இந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த பட்நாயக் நேற்று சிகிச்சை பலனின்றி தனது 97-வது வயதில் விசாகப்பட்டினத்தில் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், கல்லூரி பேராசிரியர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.