ஹரின் – ஜூலி சந்திப்பு!!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பில் உடனடி மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்கத் தூதுவர் தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, இலங்கையின் இயற்கை அழகையும் கண்கவர் கலாச்சாரத்தையும் அதிகமான அமெரிக்கர்களுடன் பகிர்ந்து கொள்வதில் தான் ஆர்வமாக உள்ளதாக ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.