மே 9 வன்முறை: இதுவரை 3310 பேர் கைது!!
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் இதுவரை 3310 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இவர்களில் 1182 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.