மேலும் நால்வர் இந்தியா சென்றனர்!!
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் படகு மூலம் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை தமிழகம் இராமேஸ்வரம் பகுதியை சென்றடைந்துள்ளனர்.
2 பெண்களும் 2 ஆண்களுமாக தமிழகத்தை சென்றடைந்தவர்களிடம் கரையோர பாதுகாப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்தியாவின் தமிழகத்திற்கு அகதிகளாக நுழைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”