;
Athirady Tamil News

இந்தியாவில் ஜி.எஸ்.டி. விதிப்பால் சீனாவை முந்தி செல்லும் பொருளாதாரம்..!!

0

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பால் இந்திய பொருளாதார உயர்ந்து வருகிறது. இதனால் சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்காவை அடுத்து 2-வது இடத்திற்கு இந்திய முன்னேறி செல்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் செல்வங்களை கொள்ளையடித்து சென்றனர். தொழிற்சாலைகள் மூடப்பட்டு வணிகம் நசுக்கப்பட்டது. மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அவர்களுடைய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இந்த நிலையில் ஆங்கிலேயர் இந்தியாவை விட்டு சென்ற பிறகு 1947 ஆம் ஆண்டு நேரு பிரதமராக பதவியேற்ற பின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்காக ஐந்தாண்டு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து முதல் ஐந்தாண்டு திட்டத்தில் விவசாய உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பசுமை புரட்சி கொண்டு வரப்பட்டன. 2-வது ஐந்தாண்டு திட்டத்தில் தொழிற்சாலை உற்பத்தியும் 3-வது ஐந்தாண்டு திட்டத்தில் விவசாய மற்றும் தொழிற்சாலை உற்பத்தியும், 4-வது ஐந்தாண்டு திட்டத்தில் நிலையான பொருளாதார திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் 1950-ம் ஆண்டு பிளானிங் கமிட்டி உருவாக்கப்பட்டன. 1990-92-ம் ஆண்டு பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது பொருளாதார ஏற்றம் காண பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டது. பின்னர் 2015-ம்ஆண்டு ஜி.எஸ்.டி. வாட் உள்ளிட்ட வரிகள் விதிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு திட்டம் கிடப்பில் இருந்தது. பின்னர் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதால் மாதத்திற்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து வருகிறது. இதனால் பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா முன்னேறி வருகிறது 2-வது இடத்தில் இருந்த சீனா 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டு வருகிறது. 1947-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை 36 கோடியாக இருந்தது தற்போது 141 கோடியாக உள்ளது. விவசாய உற்பத்தி 52 சதவீதத்திலிருந்து தற்போது 17 சதவீதமாக குறைந்துள்ளது. தொழில்துறை 15 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகவும், சேவை துறை 33 சதவீதத்திலிருந்து 53 சதவீதமாக உயர்ந்து உள்ளது. 1947 இல் ஏற்றுமதி ரூ.60 கோடியில் இருந்து தற்போது ரூ.33 லட்சத்து 76 ஆயிரம் கோடியாக உயர்ந்து உள்ளது. இறக்குமதி ரூ.612 கோடியில் இருந்து ரூ.4,80,800 கோடியாக உள்ளது. ரூ.382 கோடி கடனாக இருந்தது. தற்போது ரூ.4 கோடியே 90 லட்சத்தி 60 ஆயிரம் கோடியாக உள்ளது. தற்போது 44 கோடி பேர் அரசு வேலையில் உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.