தியவன்னா ஓயாவிற்குள் விழுந்த ஆளில்லா விமானம்… !!
பாராளுமன்றத்தின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானம் தியவன்னா ஓயாவில் வீழ்ந்ததில் சுமார் ஐம்பது இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விமானம் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆளில்லா விமானம் இலங்கை விமானப்படைக்கு சொந்தமானது. கடந்த மாதம் 20ஆம் திகதி பாராளுமன்ற திறப்பு விழாவின் பாதுகாப்புக்காக விமானம் ஈடுபடுத்தப்பட்டிருந்த வேளையில் திடீரென தியவன்னா ஓயாவில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானத்தின் பேட்டரி வலுவிழந்ததால் விபத்துக்குள்ளானதாக தற்போதைய விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், விமானத்தை பத்திரமாக தரையிறக்க விமானப்படை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் அது தோல்வியில் முடிந்ததாக தெரியவந்துள்ளது.
தியவன்னாவையில் விபத்துக்குள்ளான ஆளில்லா விமானம் கடற்படையின் டைவிங் குழுவினரால் அண்மையில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.