மின்சார முச்சக்கரவண்டியில் பயணித்த அமைச்சர்!!
கொழும்பு, பொரலஸ்கமுவ பிரதேசத்திலுள்ள மின்சார முச்சக்கரவண்டி பாகங்களை இணைக்கும் நிலையத்தை அவதானிப்பதற்காக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.
போக்குவரத்து அமைச்சர் என்ற வகையில்,பந்துல குணவர்தன மின்சார முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்கான மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுள்ளார்.
அதற்கமைய அதன் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
எதிர்வரும் சில நாட்களில் மின்சார முச்சக்கரவண்டி பாவனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்போது அங்கிருந்து முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.