வெளிநாட்டு தம்பதியினருக்கு மோசடி செய்த நபர் கைது!!
கண்டி புகையிரத நிலையத்தில் வெளிநாட்டு தம்பதியருக்கு அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டை விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் 2600 ரூபா டிக்கெட்டை 7600 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் இந்த பயணச்சீட்டை விற்பனை செய்து கொண்டிருந்த போது, புகையிரத நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.